News July 5, 2025

திருநள்ளாறு அனைத்து பகுதிகளிலும் இன்று மின் தடை

image

திருநள்ளாறு தொகுதிக்குட்பட்ட செல்லூர் நல்லம்பல் சுரக்குடி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இன்று (ஜூலை 5) சனிக்கிழமை காலை 10.30 am முதல் 12.30 am வரை சுரக்குடி துணை மின் நிலையத்தில் அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின்சாரம் மேற்கண்ட நேரத்தில் இருக்காது என திருநள்ளாறு மின்துறை அலுவலகம் அறிவித்துள்ளது.

Similar News

News July 5, 2025

புதுவையில் பெண் தூய்மை பணியாளர் தற்கொலை

image

புதுவை, சூரமங்கலம் பள்ளிக்கூட வீதியைச் சேர்ந்த ஒப்பந்த தூய்மை பணியாளர் தனலட்சுமி. இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு, மாத்திரை வாங்கி சாப்பிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் வயிற்று வலி அதிகமானதால், இரவு நேரத்தில் அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக, அவரது மகன் பழனிவேல் கொடுத்த புகாரின் பேரில் மடுகரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News July 4, 2025

சொர்ணவாரி பட்டத்தில் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

image

புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை கூடுதல் வேளாண் இயக்குநர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இந்தாண்டு, சொர்ணவாரி நெற்பயிர் பட்டத்திற்கு கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூன் 15ம் தேதி வரை விதை விதைத்து, பயிர் செய்த விவசாயிகள் இந்த மாதம் 15ம் தேதிக்குள், பயிர்க் காப்பீடு செய்து பயன்பெற வேண்டும்.பொதுச் சேவை மையத்தில், தகவல்களை சரிபார்த்துக் கொள்ளலாம்.” என தெரிவித்துள்ளார்.

News July 4, 2025

எம்.டி.எஸ்., படிக்க அழைப்பு-APPLY NOW!

image

புதுச்சேரி சென்டாக் நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் பல் மருத்துவம் முதுகலை (எம்.டி.எஸ்.,) படிப்பில் சேர இந்தாண்டு நடைபெற்ற எம்.டி.எஸ்., நீட் தேர்வில் தகுதி பெற்றவர்களிடம் இருந்து அரசு, அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் என்.ஆர்.ஐ., இடங்களுக்கு நேற்று 3ம் தேதி முதல் வரும் 6ம் தேதிக்குள் www.centacpuducherry.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!