News May 20, 2024
திருநங்கையருக்கு அரிய வாய்ப்பு

மதுரை சொக்கிகுளத்தில் உள்ள தனியார் திருநங்கையர் ஆவண மையத்தில் திருநங்கையர், திருநம்பிகளுக்கான இலவச ஓவியப் பயிற்சி வரும் 23ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. 3 வகையான ஓவிய பயிற்சி வழங்கப்பட உள்ள நிலையில் பயிற்சிக்கு வருபவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.150 வீதம் ரூ.450 வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு 9600555097 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News September 12, 2025
ரூ.2.93 கோடி செலவில் தயாராகும் மதுரையின் குற்றாலம்

மதுரையின் குற்றாலம் என அழைக்கப்படும் வாடிப்பட்டி அருகே உள்ள குட்லாடம்பட்டி அருவி சுற்றுலாத்துறையின் சீரமைப்புத் திட்டத்தில் ரூ.2.93 கோடி மதிப்பீட்டில் அனுமதி கிடைத்துள்ளது. நீதிமன்ற வழிகாட்டுதலின்படி மிதிவண்டி நிறுத்தம், நீர்நிலை மேம்பாடு, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்தச் செய்தி மதுரை மக்களை குளிரச் செய்துள்ளன.தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.
News September 12, 2025
தல்லாகுளம் பெருமாள் கோவிலில் புரட்டாசி பெருந்திருவிழா

மதுரை அழகர் கோவில் உபகோவில் ஆன தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிக முக்கியமான புரட்டாசி பெருந் திருவிழா வருகிற 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து முகூர்த்த நாள் நடப்படும். தொடர்ந்து அக்டோபர் இரண்டாம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறும் தெப்ப உற்சவம் நான்காம் தேதி நடைபெறுகிறது.
News September 12, 2025
மதுரையில் 13, 14ம் தேதிகளில் தாயுமானவர் திட்டம்

மதுரை மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேல் உள்ள குடும்ப அட்டை தாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த மாதத்திற்கான குடிமை பொருட்கள் வரும் 13, 14ம் தேதிகளில் வினியோகம் செய்யப்பட உள்ளது. மேலும் வரும் மாதங்களில் மாதத்தின் 2வது சனி & ஞாயிற்றுக்கிழமைகளில் தாயுமானவர் திட்டத்தின்கீழ் பயனாளிகளின் இல்லங்களுக்கே நேரில் ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்பட உள்ளளது.