News March 22, 2024
திருநங்கைகள் 100% வாக்களிக்க வேண்டும்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2024 மக்களவைத் தேர்தலில் தொடர்பாக பொதுமக்கள் அனைவரும் 100% வாக்களிப்பது அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா திருநங்கைகள் தபால் அட்டை மூலம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கடிதம் எழுதியுள்ளார்.
Similar News
News November 14, 2025
தேனி: தலைவலியால் ஒருவர் விஷமருந்தி தற்கொலை.!

ஓடைப்பட்டி அருகே கரிச்சிபட்டியை சேர்ந்தவர் முருகன் (47). இவருக்கு 6 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட விதத்தின் காரணமாக தீராத தலைவலி இருந்து வந்துள்ளது. அதற்கு சிகிச்சை எடுத்தும் பலனளிக்காத காரணத்தினால் 2 தினங்களுக்கு முன்பு முருகன் விஷம் அருந்தி உள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று (நவ.13) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து ஓடைப்பட்டி போலீசார் வழக்கு பதிவு.
News November 14, 2025
தேனி: ஜூஸ் வியாபரி தற்கொலையில் மர்மம்

தஞ்சாவூர், பள்ளிகொண்டான் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (34). இவர் கம்பத்தில் 4 வருடங்களாக ஜுஸ் கடை வைத்து நடத்தி வருகின்றார். இவருக்கு திருமணமகாத நிலையில் கடையின் அருகே வேலை செய்யும் பொம்முதாய் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் வீட்டில் யாரும் இல்லாத பொழுது சதீஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கம்பம் போலீசார் வழக்கு (நவ.13) பதிந்து விசாரணை.
News November 14, 2025
தேனி: நகராட்சி பணியாளரை கத்தியால் குத்தியவர் கைது

பெரியகுளம் தென்கரை பகுதியில் நேற்று (நவ.13) பெரியகுளம் நகராட்சி சார்பில் சாலை பணி நடைபெற்று உள்ளது. அங்கு வந்த காமராஜ் (27) என்பவர் பணியில் இருந்தவர்களிடம் மாமுல் கேட்டு தகராறு செய்துள்ளார். அதனை நகராட்சி தற்காலிக பணியாளர் தினேஷ் தட்டி கேட்ட நிலையில் அதனால் ஆத்திரமடைந்த காமராஜ், தினேஷை கத்தியால் குத்தி தாக்கியுள்ளார். இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து காமராஜை கைது செய்தனர்.


