News June 20, 2024
திருநங்கைகளுக்கு நாளை சிறப்பு முகாம்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மக்கள் குறை தீர் கூட்டரங்கில் நாளை (ஜூன் 21) காலை 10 மணிக்கு திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. திருநங்கைகள் நலத்திட்ட உதவிகள் மற்றும் அடையாள அட்டை காப்பீடு அட்டை ஆயுஷ்மான் பாரத் அட்டைகள் பெற திருத்தங்கள் மேற்கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 29, 2025
திருப்பத்தூர் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட வார்டுகள் 17,28,30 பகுதிகளில் உட்பட்ட மக்களுக்காக இன்று (29) தனியார் திருமண மண்டபத்தில் பல்வேறு அரசு துறை சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, கலந்து கொண்டு மக்களின் மனுவைப் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு ஒப்புகைச்சீட்டினை வழங்கினார். மேலும் இந்த நிகழ்வில் துறை சார்ந்த அதிகாரிகளும் உடன் இருந்தனர்.
News August 29, 2025
மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் பொதுமக்கள் கவனத்திற்கு நீர் நிலைகளில் சிலைகளை கரைக்கச் செல்லும்போது ஆழமான பகுதிகளுக்கு சென்று ஆபத்தில் சிக்க வேண்டாம். மேலும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் பாதுகாப்பாக விநாயகர் சிலையை கரைக்க வேண்டும் என்று காவல் துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
News August 29, 2025
திருப்பத்தூர்: வாகனம் வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்

திருப்பத்தூர் மக்களே வீட்டில் இருந்தபடியே உங்க லைசன்ஸ் அப்பிள்ளை செய்வது, லைசன்சில் முகவரியை திருத்தும் செய்வது, அலைபேசி எண்கள் சேர்ப்பது போன்ற செயல்களை செய்ய இந்த<