News June 14, 2024
திருநங்கைகளுக்கு சிறப்பு முகாம் – ஆட்சியர் அறிவிப்பு

தருமபுரி மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கு வரும் ஜூன் 21 அன்று காலை 10 மணி முதல் 4 மாலை மணி வரை மாவட்ட ஆட்சியரகத்தில் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில் அடையாள அட்டை பதிவு செய்தல், ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படுகிறது. மேலும் தகவலுக்கு 04342-233088 என்ற எண்ணை தொடர்பு கொள்ளும்படி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
Similar News
News March 1, 2026
தருமபுரி : கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

தருமபுரி மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் e-KYC மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. e-KYC இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE!
News March 1, 2026
தருமபுரி: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News March 1, 2026
தருமபுரி: மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர்

தருமபுரி: புலிக்கரை அருகே உள்ள மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா நேற்று(பிப்.28) நடைபெற்றது. இந்த விழாவில் தருமபுரி அதிமுக மாவட்ட கழக செயலாளர் கே. பி. அன்பழகன் முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் பத்துக்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பலரும் பங்கேற்றனர்.


