News September 26, 2024
திருநங்கைகளுக்கு கல்வி கட்டணம்: தென்காசி கலெக்டர்

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருநங்கைகள் நல வாரியத்தின் மூலம் தென்காசி மாவட்டத்தில் உயர் கல்வியில் சேரும் அனைத்து திருநங்கை மற்றும் திருநம்பிகளுக்கு தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தின் மூலம் கல்வி கட்டணம் விடுதி கட்டணம் உள்ளிட்ட அனைத்து கல்வி செலவையும் வழங்கிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
Similar News
News October 4, 2025
தென்காசி கிராம சபைக் கூட்டம் தேதி அறிவிப்பு

தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வரும் (11.10.2025) அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தினை கண்காணிக்க மாவட்ட அளவிலான உதவி இயக்குநர் நிலை அலுவலர்கள் மற்றும் வருவாய் வட்டாட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இக்கிராம சபை கூட்டங்களில் கிராம ஊராட்சிகளின் அனைத்து பொதுமக்களும் கலந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.
News October 4, 2025
தென்காசி: உங்க வீட்ல குழந்தைகள் இருக்கா??

தென்காசி மக்களே, உங்கள் வீட்டில் 5 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு இருந்தா? பால் ஆதார் எடுக்க வேண்டும். கல்வி மற்றும் மருத்துவ தேவையின் போது ஆதார் அவசியமான ஓன்றாகும். இதற்காக நீங்க அலையாம வாங்க எளிய வழி இருக்கு. இங்கு <
News October 4, 2025
தென்காசி: கனிமவளம் லாரி மோதி ஒருவர் பலி

தென்காசி மாவட்டம் தேன் பொத்தை அம்மன் கோவில் அருகே கேரளா மாநிலத்திற்கு கனிம வளம் ஏற்றிச் சென்ற லாரி மோதி சாலையில் நடந்து சென்ற திருமலை கோவில் சாலையை சார்ந்த மாரிமுத்து என்பவர் தலை நசுக்கி பரிதாபமாக உயிரிழந்தார். செங்கோட்டை காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்கு செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை.