News June 6, 2024
திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்

சிவகங்கை சமூக நலத்துறை மற்றும் இதர நலத்திட்ட சேவைகள் வழங்கும் துறைகளின் சார்பில் திருநங்கைகள் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு ஏதுவாக ஜூன்.21 ஆம் தேதி திருநங்கைகளுக்கான ஒரு நாள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. கூடுதல் விபரங்களுக்கு 04575 240426 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News May 8, 2025
ரூ.1 லட்சம் வழங்கிய நடிகர் ராகவா லாரன்ஸ்

பூவந்தி அருகே கிளாதரி கக்ணாம்பட்டியை சேர்ந்த குமார், முத்துகருப்பி தம்பதியினர் தனது குழந்தைகளின் காதணி விழாவிற்காக ரூ.1 லட்சம் பணத்தை சேமித்து ஒரு தகர டப்பாவில் போட்டு மண்ணில் புதைத்து வைத்திருந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு அதை பார்க்கும் பொழுது பணம் கரையான்களால் பறிக்கப்பட்டிருந்ததை கண்டு வேதனை அடைந்தனர். இதை அறிந்த நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று தம்பதியை நேரில் அழைத்து ரூ.1 லட்சம் வழங்கினார்.
News May 7, 2025
சிவகங்கை: காவல்துறை அதிகாரிகளின் தொடர்பு எண்கள்

ஆஷிஷ் ராவத் ஐபிஎஸ் – 04575-240427 (எஸ்.பி)
பி.கலைகதிரவன் – 04575-243244 (ஏ.டி.எஸ்.பி)
எல்.பிரான்சிஸ் – 04575240587 (ஏ.டி.எஸ்.பி)
சி.உதயகுமார் – 9498164247(ஏ.டி.எஸ்.பி)
திருப்பத்தூர் – 04577-26213 (டி.எஸ்.பி)
தேவக்கோட்டை- 04561-273574 (டி.எஸ்.பி)
காரைக்குடி – 04565-238044 (டி.எஸ்.பி)
மானாமதுரை- 04574-269886 (டி.எஸ்.பி)
சிவகங்கை – 04575-240242 (டி.எஸ்.பி) *ஷேர் பண்ணுங்க
News May 7, 2025
சிவகங்கை மாவட்டத்தில் 4 ரயில் நிறுத்தம்

கோயமுத்தூர் – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் வாரந்தோறும் பிரதி புதன்கிழமை சிவகங்கை மாவட்ட ரயில் நிலையங்களான காரைக்குடி சந்திப்பு, தேவகோட்டை ரோடு, சிவகங்கை, மானாமதுரை சந்திப்பு வழியாக நின்று செல்லும் கால புதிய கால அட்டவணை வெளியாகி உள்ளது. சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அறிவிக்கலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. *ஷேர் பண்ணுங்க