News October 23, 2024
திருத்துறைப்பூண்டி – திருவாரூர் – காரைக்குடி ரயில் சேவை

திருவாரூர் சந்திப்பு – திருத்துறைப்பூண்டி சந்திப்பு – காரைக்குடி சந்திப்பு ரயில் வழித்தடத்தில் உள்ள ரயில் சேவைகள் இன்று திருவாரூர் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து திருத்துறைப்பூண்டி மார்க்கம் வண்டி எண் 20683 தாம்பரம் – செங்கோட்டை அதிவிரைவு ரயில் அதிகாலை 2.00 மணி, திருத்துறைப்பூண்டி – அதிகாலை 2.29 மணி, முத்துப்பேட்டை – 2.54 மணி, பட்டுக்கோட்டை – 3.23 மணி சேர்கிறது. ஷேர் செய்யவும்
Similar News
News February 3, 2026
திருவாரூர்: WhatsApp-ல் சான்றிதழ்கள்! HI சொல்லுங்க

திருவாரூர் மாவட்ட மக்களே இனி இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ் போன்றவற்றை பெற அரசு அலுவலகங்கள் அல்லது இசேவை மையங்களுக்கு நேரில் அலைய வேண்டிய அவசியமில்லை. இனி அவற்றை வாட்ஸ்அப் மூலமாகவே எளிதாகப் பெறலாம். இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.
News February 3, 2026
திருவாரூர்: போலீஸ் வேன்- பைக் மோதி விபத்து

திருவாரூர் போலீஸ் ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிபவர் ஷியாமநாதன் (28). இவர் ஆயுதப்படை வேன் ஓட்டி வருகிறார். சம்பவத்தன்று கொரடாச்சேரி அருகே இவர் ஓட்டி வந்த வேனும், அம்மையப்பன் பகுதியைச் சேர்ந்த திவாகர் என்பவர் ஓட்டி வந்த பைக்கும் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் திவாகர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். இதுகுறித்து கொரடாச்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News February 3, 2026
திருவாரூர்: கறிக்கடைக்காரருக்கு கத்திக்குத்து

கொரடாச்சேரி அடுத்த வெண்ணவாசலைச் சேர்ந்தவர் காதர் மைதீன் (32). கறிக்கடை வைத்துள்ள இவருக்கும், பக்கத்து வீட்டுக்காரரான ஷேக் தாவூது என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில், ஷேக் தாவூதுக்கு ஆதரவாக முகமது மைதீன், பிரபு ஆகியோர் காதர் மைதீனிடம் தகராறு செய்து பேனா கத்தியால் அவரை குத்தி கிழித்துள்ளனர். கொரடாச்சேரி போலீசார் வழக்கு பதிந்து 2 பேரையும் கைது செய்தனர்.


