News August 11, 2024
திருத்தணி முருகன் கோயிலில் நடிகை ரோஜா காவடி செலுத்தினார்

ஆந்திர மாநில முன்னாள் அமைச்சரும் ,நடிகையுமான ரோஜா திருத்தணி முருகன் கோயிலுக்கு உறவினர்களுடன் காவடி எடுத்து வழிபாடு மேற்கொண்டார். சாமி தரிசனம் செய்து முருகனுக்கு கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து நேர்த்திக் கடனை செலுத்தினார். தொடர்ந்து அர்ச்சனை செய்தும் வழிப்பட்டு சென்றார். கோவில் சார்பில் அவருக்கு வரவேற்பும் பிரசாதமும் வழங்கப்பட்டது.
Similar News
News September 8, 2025
திருவள்ளூர்: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு

திருவள்ளூர் மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்து கொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்து SMS வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். (தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க)
News September 8, 2025
நந்தியம்பாக்கம்: மின் கம்பியை மிதித்து 4 எருமை மாடுகள் பலி

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நளினி மற்றும் பலராமன் தம்பதியரின் நான்கு எருமை மாடுகள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தன. இன்று காலை, நந்தியம்பாக்கம் பகுதியில் மேய்ச்சலுக்குச் சென்றபோது, அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் இந்தச் சோகம் நேர்ந்துள்ளது. பால் வியாபாரத்தை நம்பி இருந்த இந்தத் தம்பதியருக்கு, மாடுகளின் இழப்பு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
News September 7, 2025
திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணி விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் செப்டம்பர் 7, 2025 அன்று இரவு ரோந்துப் பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் பட்டியல் காவல் நிலையம் வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு பொதுமக்கள் இந்த அதிகாரிகளைத் தொடர்புகொள்ளலாம். அத்துடன், அவசர உதவி எண் 100-ஐயும் பயன்படுத்தலாம். பொதுமக்கள் எளிதாகத் தொடர்புகொள்வதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.