News December 30, 2025
திருத்தணி தாக்குதல் சம்பவம்.. முறைத்ததால் தகராறு: IG

திருத்தணியில் <<18693605>>வடமாநில தொழிலாளியை<<>> கஞ்சா போதையில் சிறுவர்கள் தாக்கிய விவகாரம் குறித்து IG அஸ்ரா கர்க் விளக்கம் அளித்துள்ளார். தாக்குதல் நடத்திய 4 பேரில் 3 பேர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும், வடமாநிலத்தவர் என்பதற்காக அல்ல, முறைத்து பார்த்ததால் தகராறு ஏற்பட்டது என்றும் பாதிக்கப்பட்டவர் அரசு ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 6, 2026
₹2,000 நோட்டுகள்.. RBI முக்கிய தகவல்

புழக்கத்தில் இருந்த ₹2,000 நோட்டுகளில் 98.41% மீண்டும் வங்கிகளுக்கு திரும்பிவிட்டதாக RBI தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, ₹5,669 கோடி மதிப்பிலான ₹2,000 நோட்டுகள் மக்களிடம் உள்ளன. உங்களிடம் ₹2,000 நோட்டுகள் இருந்தால், அவற்றை RBI-ன் கிளை அலுவலகங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். 2023 மே மாதத்தில் இருந்து ₹2,000 நோட்டுகளின் புழக்கத்தை RBI நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.
News January 6, 2026
பொங்கல் விடுமுறை.. ஜன.9 முதல் சிறப்பு பஸ்கள்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வெளியூரில் இருப்போர் சிரமமின்றி சொந்த ஊர் செல்வதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. ஜன.9 – 14 வரையிலான 6 நாள்களில், வழக்கமாக இயக்கப்படும் (2,092) பஸ்களை விட கூடுதல் எண்ணிக்கையில் (22,797) சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சொந்த ஊர் செல்வோர் இங்கே <
News January 6, 2026
₹9.2 கோடி இல்லை.. வெறும் கையோடு திரும்பும் வீரர்!

₹9.2 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வங்கதேச வீரர் முஸ்தபிஃசுர் ரஹ்மானை KKR விடுவித்துள்ளது. பொதுவாக, ஒரு வீரர் காயம் (அ) வேறு எந்த தவறும் செய்யாத நிலையிலோ அணியில் இருந்து நீக்கப்பட்டால், அவருக்கு அந்த அணி இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும். ஆனால் <<18751941>>முஸ்தபிஃசுர்<<>>, இந்தியா – வங்கதேசம் இடையிலான உறவு விரிசல் காரணமாக, BCCI உத்தரவால் விடுவிக்கப்பட்டதால், அவருக்கு இழப்பீடு வழங்க தேவையில்லை என கூறப்படுகிறது.


