News April 8, 2025
திருத்தணி அருகே லாரி – பேருந்து மோதி விபத்து: 11 பேர் காயம்

திருத்தணியில் இருந்து கிறிஸ்துவ கூட்டத்திற்கு, கல்லூரி பேருந்தில் 60 பேர் சென்றுள்ளனர். கூட்டத்திற்கு சென்றுவிட்டு திரும்பும்போது, சென்னை – திருப்பதி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரியின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானது. பேருந்தில் பயணித்த 11 பேர் காயமடைந்தனர். 10 பெண்கள் மற்றும் 1 ஆண் உட்பட 11 பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 17, 2025
அங்கன்வாடி பணி: விண்ணப்பிப்பது எப்படி?

திருவள்ளூரில், 369 அங்கன்வாடி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள், இந்த லிங்கை <
News April 17, 2025
போலீசாரை கத்தியைக் காட்டி மிரட்டியவா் கைது

திருவள்ளூா் டோல்கேட் பகுதியில் உள்ள ஊத்துக்கோட்டை சாலையில், போலீசார் கடந்த செவ்வாய்க்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு வந்த பைக்கை சோதனை செய்ய போலீசார் மறித்தனா். பைக்கை விட்டு இறங்கி வந்த இளைஞா், போலீசாரை தகாத வாா்த்தை பேசியதோடு, பட்டா கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தார். பின்னர், போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில், அவர் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது தெரியவந்தது.
News April 17, 2025
கொலை செய்ய சதி: மேலும் ஒருவர் கைது

திருமழிசை பகுதியில் எபினேசர் என்பவர் கடந்த 2024 செப்டம்பர் மாதம், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த மண்ணுார் பகுதியில் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு பழிக்குப் பழியாக கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய 7 பேரில் மூவரை கடந்த 15ஆம் தேதி இரவு வெள்ளவேடு போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய 4 பேரை தேடி வந்த நிலையில், நேற்று (ஏப்ரல் 16) கவியரசு (26) என்பவரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.