News January 25, 2026

திருத்தணியைச் சேர்ந்தவருக்கு பத்மஸ்ரீ விருது

image

திருத்தணி சுவாமிநாதன் (76) ஆறு தசாப்தங்களுக்கும் மேலாகத் தேவாரத் திருமுறைகளைப் பாடிவரும் மூத்த ஓதுவார் ஆவார். தருமபுர ஆதீனப் பள்ளியில் மாணவர்களுக்குத் தேவாரப் பாடல்களைக் கற்பித்து வரும் இவர், மதுரை சோமுவின் இசையால் ஈர்க்கப்பட்டு இப்பணியில் ஈடுபட்டுள்ளார். ஓதுவார் நலச்சங்கம், பக்தஜன சபை போன்ற அமைப்புகளில் தேவாரத் திருவாசக இன்னிசை நிகழ்ச்சிகளை நடத்தும். இவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது

Similar News

News January 27, 2026

திருவள்ளூர் கலெக்டர் அறிவித்தார்!

image

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அறிவிப்பின்படி, திருநங்கையர் தினத்தை முன்னிட்டு சிறந்த திருநங்கைக்கான விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதுடன் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும். மேலும், விருது பெற விரும்புவோர் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, (பிப்.18)க்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

News January 27, 2026

திருவள்ளூரில் நாளை விடுமுறை இல்லை!

image

திருவள்ளூர் மாவட்டத்தில் ராஜகோபாலசுவாமி கோயில் குடமுழுக்கு விழா 28-ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, அன்றைய தினம் திருவள்ளூருக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாக ஓர் தகவல் பரப்பப்பட்ட நிலையில், தற்போது அந்தத் தகவல் தவறானது எனத் தெரிய வந்துள்ளது. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 27, 2026

திருவள்ளூரில் நாளை மின் தடை!

image

திருவள்ளூர் கோட்டத்தைச் சேர்ந்த குஞ்சலம் துணை மின் நிலையத்தில் நாளை(ஜன.28) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக சீத்தஞ்சேரி, அம்மம்பாக்கம், குஞ்சலம், நெல்வாய், பிளேஸ் பாளையம், அல்லிக்குழி, எஸ்.ஆர்.குப்பம், வெள்ளாத்து கோட்டை, ஒதப்பை இண்டஸ்ட்ரியல் ஏரியா, கம்மார்பாளையம், கச்சூர் ஆகிய பகுதிகளில் காலை 9:00 – மாலை 5:00 வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை உடனே SHARE!

error: Content is protected !!