News June 28, 2024
திருட்டு வழக்கில் 2 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்.!

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் ஓட்டுநரின் இருசக்கர வாகனத்தை திருடியதாக சரித்திர பதிவேடு குற்றவாளி வினோத்குமார் மற்றும் இம்ரான்கான் என்பவரை போலீசார் கைது செய்தனர்.மேலும் விசாரணையில் ரவுடி வினோத்குமார் மீது 10 வழக்குகள் நிலுவையில் இருப்பதும், இம்ரான்கான் மீது 7 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்ததால், 2 இருவரையும் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க திருச்சி கமிஷனர் உத்தரவிட்டார்.
Similar News
News March 4, 2026
திருச்சி: பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவிப்பு

திருச்சியில் செயல்பட்டு வந்த எல்பின் நிதி நிறுவனம், பண மோசடி செய்ததாக 8,441 பேர் புகார் அளித்திருந்தனர். அவர்களில் இதுவரையில் 3942 பேர் மட்டுமே பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி வழக்கு தொடர்புடைய ஆவணங்களை ஆஜர் செய்துள்ளனர். மீதமுள்ள நபர்கள் உரிய ஆவணங்களுடன், திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி, வாக்குமூலம் வழங்க வேண்டும் என துணை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News March 3, 2026
திருச்சி ரயில் நிலையத்தில் தீவிர சோதனை

திருச்சி மாவட்ட ரயில்வே பாதுகாப்பு படையினர், வெடிகுண்டு தடுப்பு பிரிவினருடன் இணைந்து, மோப்பநாய் உதவியுடன் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர். பயணிகளின் உடைமைகள், நடைமேடைகள், பார்சல் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. வெளி மாநிலங்களில் இருந்து மது பாட்டில்கள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி வருவதை தடுக்கும் வகையில் இந்த சோதனை நடைபெற்றது.
News March 3, 2026
திருச்சி: சொத்து பத்திரம் இனி உங்க PHONE-ல்!

திருச்சி மக்களே, <


