News December 15, 2025

திருட்டு வழக்கில் 2 பேருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை

image

சோழ­வந்தான் பகுதியில் 2020ல் நடந்த திருட்டு குற்­றத்தில் கார்த்திக் என்ற சுண்டு கார்த்திக்(20), வீரமணி(20) ஆகியோரை போலீ­சார் கைது செய்­த­னர். வாடிப்பட்டி குற்­ற­வியல் நீதிமன்­றத்தில் நடந்த இந்த வழக்கில், தீர்ப்பை நீதி­பதி செல்­லையா நேற்று வழங்­கினார். அதில் கார்த்திக், வீரமணி ஆகிய இருவருக்கும்
தலா 4 ஆண்டுகள் கடுங்­கா­வல் தண்­ட­னை­யும் தலா ரூ.
20 ஆயிரம் அப­ராதமும் விதித்து தீர்ப்­பளித்­தார்.

Similar News

News December 17, 2025

மதுரை: பான்கார்டு உங்ககிட்ட இருக்கா?

image

மதுரை மக்களே ஆதார் உடன் பான் கார்டு இணைக்கவில்லை (அ) ஆதாரில் எதும் மாற்றம் செய்திருந்தாலோ உங்கள் பான்கார்டு DEACTIVATE ஆக வாய்ப்புள்ளது. <>இங்கு கிளிக்<<>> செய்து உங்க பான்கார்டு விவரங்களை பதிவு செய்து பான்கார்டு STATUS பார்த்து DEACTIVATEல் இருந்தால் 1800 222 990 எண் அல்லது இந்த tinpan.proteantech.in புகார் செய்து ACTIVATE செய்யுங்க… PAN CARD தற்போது அத்தியாவாசியமான ஓன்றாக உள்ளது.SHARE செய்யுங்க

News December 17, 2025

மதுரையில் எலி மருந்து குடித்து தற்கொலை

image

மதுரை ஆண்டார்கொட்டாரத்தைச் சேர்ந்தவர் ராமக்கோடி (62). இவர் தொடர்ந்து மது அருந்தி வந்ததால் வீட்டார் கண்டித்துள்ளனர். இதனால் மனம் உடைந்த அவர், நேற்று எலி மருந்தை அருந்தியுள்ளார். அவரை மீட்டு சிகிச்சைக்காக G.H-ல் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமக்கொடி உயிரிழந்தார். இது குறித்து சிலைமான் போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

News December 17, 2025

மதுரையில் சிக்கிய மாடு திருடும் கும்பல்!

image

மதுரை வண்டியூர் கோமதிபுரம் உள்ளிட்ட பகுதியில் மாடுகள் திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடந்த வண்ணம் இருந்தது. இந்த கும்பலை மாட்டின் உரிமையாளரும், போலீசாரும் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வண்டியூரில் ஒரு வீட்டின் முன் கட்டப்பட்டிருந்த கறவை மாடுகளை, 4 சிறுவர்கள் உட்பட 5 பேர் வாகனத்தில் ஏற்றி கடத்த முயன்றுள்ளனர். அப்போது அப்பகுதியினர் அவர்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

error: Content is protected !!