News April 15, 2025

திருட்டில் ஈடுபட்டவர்களுக்கு கால் எலும்பு முறிவு

image

செங்கல்பட்டில் மன்சூர் அலி என்பவரின் துணிக்கடையில் கடந்த 7ம் தேதி ரூ.50,000 திருடப்பட்டது. மேலும் அருகில் இருந்த கடைகளிலும் பணம் திருடப்பட்டது. இதில் சென்னையை சேர்ந்த அருண், வெள்ளை செல்வா, ராகவேந்திரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தப்ப முயன்ற ராகவேந்திரன், வெள்ளை செல்வா இருவரும் தவறி விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சிகிச்சைக்குப் பின், மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

Similar News

News February 3, 2026

செங்கல்பட்டு: இன்று இரவு பணி செய்யும் காவலர் விவரம்

image

செங்கல்பட்டு இன்று ( பிப்ரவரி-02) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News February 2, 2026

செங்கல்பட்டு மக்களே 5 ஏக்கர் நிலம் வாங்க வாய்ப்பு!

image

பெண்கள் சொந்த நிலம் வாங்க தமிழக அரசு அறிமுகப்படுத்திய ‘நன்னிலம்’ திட்டத்தின் கீழ் 2.5- 5 ஏக்கர் வரையிலான நிலம் வாங்க 50% மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளிருக்கும் 18 – 56 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் TAHDCO அலுவலகத்தில் நேரடியாக சென்றோ (அ) இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கவும். ஷேர் பண்ணுங்க

News February 2, 2026

செங்கை: கடைகளில் வாங்கிய பொருட்கள் சரியில்லையா?

image

சில சமயம் நாம் கடைகளில் வாங்கும் பொருட்கள் தரமற்றோ, பழைய பொருட்களாகவோ வரலாம். இதை கடை ஓனர் மாற்ற மறுத்தாலோ (அ) பணத்தைத் தராவிட்டாலோ நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் புகார் செய்யலாம். வாங்கிய பொருள் 15 நாட்களுக்குள் சேதாரம் இல்லாமல், வாங்கிய நிலையில் இருந்தால், அதை மாற்ற, பணத்தைத் திரும்பப் பெற உரிமை உண்டு. மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை (044-27428832) தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!