News July 7, 2025
திருச்செந்தூர்: பிற்பகல் 2 மணி முதல் பக்தர்களுக்கு தரிசனம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று காலை கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. நேற்று முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படாத நிலையில், இன்று பிற்பகல் 2 மணி முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதனால், லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகனை தரிசிக்க உள்ளனர்.
Similar News
News July 7, 2025
தூத்துக்குடி: கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு (1/1)

தமிழ்நாடு வருவாய்த் துறையில் 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், தூத்துக்குடிக்கு 77 காலிப் பணியிடங்கள் உள்ளது. விண்ணப்பிக்க ஆகஸ்ட் 4 கடைசி நாளாகும். இப்பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், தமிழில் எழுத/படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மாத சம்பளம்: ரூ.11,100 முதல் 35,100 வரை வழங்கப்படும். சைக்கிள்/ டூவீலர் ஒட்டத் தெரிந்தால் கூடுதல் மதிப்பெண். <<16974683>>மேலும் அறிய<<>>
News July 7, 2025
தூத்துக்குடி: கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு (1/2)

தூத்துக்குடி, 77 கிராம உதவியாளர் பணிக்கு காலிபணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
▶️விண்ணப்பதாரர்களுக்கு திறனறிவு தேர்வு, நேர்காணல் ஆகியவை நடத்தப்படும்.
▶️அனைவரும் கட்டாயம் 10-ம் வகுப்பு மதிப்பெண்கள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
▶️மேலும், தேர்வர்கள் அப்பகுதியை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
▶️ விவரங்களுக்கு தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் மற்றும் அருகேயுள்ள தாலுகா அலுவலகத்தை நேரில் அணுகலாம்.
News July 7, 2025
கழுகு பார்வையில் திருச்செந்தூர் முருகன் கோவில்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று (ஜூலை 7) மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனையொட்டி நேற்று இரவே வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். கோவில்கள் முழுவதும் வண்ண விளக்குகளால் பக்தர்களின் அலைகளால் காட்சியளிக்கின்றன. இதோ திருச்செந்தூர் கும்பாபிஷேக நன்னீராட்டு விழா கழுகு பார்வை புகைப்படம். *SHARE IT*