News October 17, 2025

திருச்செந்தூர் கோவிலில் 4,600 போலீசார் பாதுகாப்பு

image

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி விழா வரும் 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இந்த திருவிழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கோட்டாட்சியர் கௌதம் தலைமை வகித்து கலந்து கொண்டார். கந்த சஷ்டி திருவிழாவில், 4,600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

Similar News

News October 19, 2025

தூத்துக்குடி: தீபாவளி சாமான் இறக்க சென்றவர் விபத்தில் பலி

image

தூத்துக்குடி, அரசன்குளம் கீழ்த் தெருவில் வசித்து வருபவர் முருகன் வயது 45, இவர் நேற்று இரவு லோடு ஆட்டோ ஓட்டி தீபாவளி சாமான்களை ஏற்றிக்கொண்டு வடக்கு இலந்தைகுளம் கிராமத்தில் சாமான்களை இறக்கி விட்டு திரும்பி வந்தார். வடக்கு இலந்தைகுளம் நான்கு வழிச்சாலையில் ஆட்டோ மீது கார் மோதியதில் ஆட்டோ டிரைவர் முருகன் பலியானார். இதுக்குறித்து போலீசார் வழக்குபதிவு.

News October 19, 2025

தூத்துக்குடி: இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

image

தூத்துக்குடி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இங்கு <>கிளிக் <<>>செய்து பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும்.
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!

News October 19, 2025

தூத்துக்குடி: ரூ.5 கோடி சீனபட்டாசுகள் பறிமுதல்

image

தூத்துக்குடி துறைமுகத்தில் சீனாவிலிருந்து தடை செய்யப்பட்ட ரூ.5 கோடி மதிப்பிலான பட்டாசுகள் கொண்ட கண்டெய்னர் ஒன்று மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட மும்பையை சேர்ந்த விகாஸ் ஈஸ்வர், மச்சந்திரா, மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த மைக்கேல் ஜகோப், சூசை மாணிக்கம் ஆகிய 4 பேர் கைது செய்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!