News December 15, 2024
திருச்செந்தூர் கடலில் பாதுகாப்பாக குளிக்க அனுமதி

திருச்செந்தூர் கடல் நேற்று சீற்றத்துடன் காணப்பட்டது. அதன் காரணமாக திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் நீராட இன்று அனுமதி இல்லை என்று நேற்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று கடலின் சீற்றம் குறைந்துள்ளதால் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பாதுகாப்புடன் கடலில் நீராட அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பாக நீராடும் படி காவல்துறையினரும் எச்சரித்து வருகின்றனர்.
Similar News
News March 8, 2026
தூத்துக்குடியில் ஒருவர் குத்தி கொலை

தூத்துக்குடி ஆதிபராசக்தி நகர் காட்டு பகுதியில் லாரி ஷெட் உரிமையாளர் ஆறுமுகம்(52) கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். தகவலின் பேரில் சென்ற சிப்காட் போலீஸார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில், உறவினருடன் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் மதுபாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டதாக தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் தலைமறைவான உறவினரை தேடி வருகின்றனர்.
News March 8, 2026
தூத்துக்குடி: சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; கோர்ட் தீர்ப்பு

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வெற்றிச்செல்வன். அவர் கடந்த 2019 ஆம் ஆண்டு பகுதியில் உள்ள ஒரு சிறுமியின் வீட்டுக்குள் அத்துமீறி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு நேற்று தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
News March 8, 2026
5 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த போலீசார்

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கதிர்வேல் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்த பெண்ணிடம் 7 பவுன் தங்கச் செயினை பறித்து சென்றார். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் சம்பவம் நடந்த 5 மணி நேரத்தில் குற்றத்தில் ஈடுபட்ட சசிகுமார் (30) என்பவரை கைது செய்து நகையை மீட்டனர்.


