News May 6, 2024
திருச்செந்தூர் அரசு பள்ளி 100 % தேர்ச்சி

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு செந்தில் ஆண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்து முடிந்த பிளஸ் டூ தேர்வில் இதுவரை இல்லாத வகையில் 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு பெற்றோர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் முதல் மதிப்பெண்ணாக 537 எடுத்து சாதனை படைத்துள்ளனர்.
Similar News
News April 19, 2025
தூத்துக்குடி:மாணவர்களுக்கு கோடைகால விளையாட்டு பயிற்சி

தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் வைத்து இம்மாதம் 25ஆம் தேதி முதல் மே மாதம் 15-ஆம் தேதி வரை இலவச விளையாட்டு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. தடகளம் கைப்பந்து கால்பந்து போன்ற விளையாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. ஹாக்கி மட்டும் கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் நடைபெறும். இதில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் மாவட்ட விளையாட்டு அலுவலர் அணுக ஆட்சியர் இளாம்பகவத் இன்று கேட்டுள்ளார்.
News April 19, 2025
தூத்துக்குடி: இயற்கை மாம்பழத்தை கண்டுபிடிப்பது எப்படி?

முக்கனியில் ஒன்றான மாம்பழத்தை பழுக்க வைக்க கார்பைடு கல்லை பயன்படுத்துகிறார்கள். இப்படி பழுக்க வைத்த பழத்தை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தும். கல்லில் பழுக்க வைத்த மாம்பழத்தை கண்டுபிடிப்பது மிகவும் எளிது. மாம்பழத்தை தண்ணீரில் போட்டுப் பார்த்தால், இயற்கையாக பழுத்த மாம்பழம் தண்ணீரில் மூழ்கும். ஆனால் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் மிதக்கும். *SHARE IT*
News April 19, 2025
கீழஈராலில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

கீழ ஈராலில் உள்ள தொன் போஸ்கோ கல்லூரியில் ஏப்.22 அன்று தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. வங்கி, காப்பீட்டு நிறுவனம், மென்பொருள் நிறுவனம் கலந்து கொள்ள இந்த முகாமில் 10 முதல் டிகிரி படித்தவர்கள் வரை கலந்து கொள்ளலாம். மேலும் தொடர்புக்கு 9442961164.7812877818 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.