News October 24, 2025

திருச்செந்தூரில் 14 பேரை கடித்த தெருநாய்!

image

திருச்செந்தூர் அருகே உள்ள கீழநாலுமூலைக்கிணறு கிராமத்தில், நேற்று தெருநாய் ஒன்று பள்ளி மாணவ, மாணவியர், பொதுமக்கள் மற்றும் வியாபாரி என 14 பேரைத் துரத்திக் கடித்து காயப்படுத்தியது. படுகாயமடைந்த அனைவரும் பிச்சிவிளை மற்றும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அப்பகுதியில் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

Similar News

News October 24, 2025

தூத்துக்குடி: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு!

image

தூத்துக்குடி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். இங்கு <>க்ளிக்<<>> செய்து உங்க விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க.

News October 24, 2025

தூத்துக்குடி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

image

திருச்செந்தூர் சூரசம்ஹாரம் விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் (அக்டோபர் 27) அன்று பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். இந்த விழாவை காண தமிழகம் முழுவதும் லட்சகணக்கான பக்தர்கள் வருகை தரும் நிலையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.SHARE!

News October 24, 2025

சேவை குறைபாட்டால் பொதுத்துறை வங்கிக்கு அபராதம்

image

விளாத்திகுளத்தை சேர்ந்தவர் நீதிமன்ற ஊழியர் கார்த்திக் ராஜா. இவர் தூத்துக்குடியில் ஒரு பொதுத்துறை வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்க முயன்ற போது பணம் வந்ததாக ரசீது மட்டும் வந்தது. ஆனால் பணம் வரவில்லை. இது சம்பந்தமாக வங்கி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தூத்துக்குடி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் வங்கிக்கு ரூ.30000 அபராதம் விதிக்கப்பட்டது.

error: Content is protected !!