News December 23, 2025
திருச்செந்தூரில் லஞ்சம் வாங்கிய ஐயர் மீது நடவடிக்கை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ரூ.100 சிறப்பு கட்டண தரிசனம் மட்டுமே நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் இக்கோவிலை சேர்ந்த திருசுந்தரர் பிரமோத் என்ற அய்யர் கடந்த 16-ம் தேதி கோவிலுக்கு வந்த பக்தர்களிடம் ரூ.500 மற்றும் ரூ.1000 லஞ்சம் கேட்ட வீடியோ இணையத்தில் வைரலானது. தொடர்ந்து அவர் பூஜை மற்றும் கைங்கரியம் செய்வதற்கு தடைவிதித்து கோவில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
Similar News
News January 24, 2026
தூத்துக்குடியில் 3 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்!

தூத்துக்குடி அருகே புதியம்புத்தூர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தியதாக, சுரேஷ்குமார் (42), வடிவேல்முருகன் (44), மகேஷ்வரன் (30) ஆகிய மூவரை புதியம்புத்தூர் போலீசார் கைது செய்தனர். இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி சிலம்பரசன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மூவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் இளம்பகவத் உத்தரவிட்டார்.
News January 24, 2026
தூத்துக்குடி: ரூ.3.44 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்!

புதூரில் முருகன் என்பவரது பெட்டிக் கடையில் போலீசார் நேற்று சோதனை நடத்தினர். இதில் அரசால் தடை செய்யப்பட்ட 50 புகையிலைப் பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, புதூர் போலீஸ் ஸ்டேஷன் அருகே அவரது வீட்டில் சோதனை நடத்தியபோது, 500 ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, முருகனை கைது செய்த போலீசார், புகையிலை மற்றும் ரூ.3 லட்சத்த 44ஆயிரம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.
News January 24, 2026
தூத்துக்குடி: Recharge செய்ய இனி Gpay, Phonepe தேவையில்லை!..

தூத்துக்குடி மக்களே, இனி ரீசார்ஜ் செய்ய அலைய வேண்டாம்! வாட்ஸ்ஆப் மூலம் ரீசார்ஜ், டேட்டா இருப்பு, பிளான் வேலிடிட்டி மற்றும் புகார்களைத் தீர்க்க வழி உண்டு.
ஜியோ: 70007 70007
ஏர்டெல்: 2482820000
Vi: 96542 97000
இந்த எண்களுக்கு ‘Hi’ என அனுப்பினால், இனி Gpay, Phonepe, Paytm இல்லாமலேயே ரீசார்ஜ் செய்யலாம், உங்க டேட்டா பேலன்ஸ் எல்லாவற்றையும் தெரிஞ்சுக்கலாம். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..


