News April 4, 2025
திருச்செங்கோட்டில் 5 பேரை கடித்து குதறிய நாய்

நாமக்கல்: திருச்செங்கோடு நகராட்சி, சூரியம்பாளையம் பகுதியில் நேற்று இரவு வெறிநாய் கடித்து சிறுவன், சிறுமி உள்ளிட்ட 5 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருச்செங்கோடு நகராட்சி சூரியம்பாளையம் பகுதியில், தெருவில் சுற்றித்திரியும் வெறி நாய் கடித்து ருத்ரா (9), குமரன் (7), தமிழ்செல்வி (63), சதீஷ் (40), வாசுகி (56) ஆகியோர் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Similar News
News September 9, 2025
நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றமில்லை !

நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் கிளைக் கூட்டம் இன்று (செப்டம்பர் 8) நடைபெற்றது. கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.15 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ள போதிலும், அதன் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த 12 நாட்களாக முட்டை விலை ரூ.5.15 ஆகவே நீடிப்பதாகக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
News September 8, 2025
நாமக்கல்: நான்கு சக்கர வாகன ரோந்து காவலர் விபரம்

நாமக்கல் மாவட்டத்தில் செப்டம்பர் 8 ஆம் தேதி இரவு 4 சக்கர வாகன ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் நாமக்கலில் ராஜமோகன் ( 9442256423), வேலூர் – ரவி ( 9598168482), ராசிபுரம் – சின்னப்பன் ( 9498169092), திருச்செங்கோடு – டேவிட் பாலு ( 9486540373), திம்மநாயக்கன்பட்டி – ரவி ( 9498168665), குமாரபாளையம் – செல்வராஜூ ( 9994497140), ஆகியோர் இரவு ரோந்து பணியில் உள்ளனர் .
News September 8, 2025
நாமக்கல்லில் வரும் 10ஆம் தேதி இலவசம்!

நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வருகிற 10ஆம் தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு திலேபியா மீன்வளர்ப்பு என்கிற தலைப்பில் ஒருநாள் இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.இந்த பயிற்சி முகாமில் பங்கேற்க விரும்பும் நபர்கள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.