News March 23, 2024
திருச்செங்கோட்டில் கடையை உடைத்து பணம் கொள்ளை

திருச்செங்கோட்டின் மையப் பகுதியான பழைய பேருந்து நிலையம் அருகே, சங்ககிரி மெயின் ரோட்டில் அமைந்துள்ள செல்லாஸ் ரெடிமேட் கடையிலும், ஸ்மார்ட் மொபைல் கடையிலும் கடையை உடைத்து கல்லாவில் இருந்த பணம் நேற்றிரவு திருடபட்டுள்ளது . சுமார் இரண்டு லட்ச ரூபாய் அளவில் திருடப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது .சிசிடிவி காட்சிகளை வைத்து திருச்செங்கோடு நகர போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News April 19, 2025
நாமக்கல்லில் அடுத்தடுத்து மழை பெய்யும்!

நாமக்கல் மாவட்டத்தில் இன்று(ஏப்.19) 5 மி.மீயிலும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 8 மி.மீ.யிலும் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) 4 மி.மீ.யிலும் முதல் 8மி.மீ வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலை அதிகபட்சமாக 98.6 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 73.4 டிகிரியாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்கம் பக்கத்தினருக்கு SHARE பண்ணுங்க.
News April 18, 2025
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (18/04/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – லக்ஷ்சுமணதாஸ் (9443286911), ராசிபுரம் – துர்க்கைசாமி (9498183251), திருச்செங்கோடு – சிவக்குமார் (9498176695) ,வேலூர் – ஷாஜகான் (9498167357) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
News April 18, 2025
ஆயுள் பலம் தரும் ராசிபுரம் கோயில்!

ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே நித்ய சுமங்கலி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் வல்வில் ஓரி காலத்தில் கட்டப்பட்டது என்கிறார்கள். திருமண தடை, தம்பதிக்கு இடையே பிரச்னைகள் நீங்க, வாழ்க்கை துணைவருக்கு ஆயுள் பலம் நீடிக்க, குடும்பத்துடன் ஒருமுறை நித்ய சுமங்கலி மாரியம்மனை தரிசித்து வழிபட்டால், நீங்கள் கேட்ட வரம் கிடைக்கும், விரும்பியது நடக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. SHARE IT!