News December 14, 2025
திருச்செங்கோடு: தவெக வேட்பாளர் இவரா?

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தவெகவின் சார்பில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் தவெகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக திருச்செங்கோட்டில் அக்கட்சியின் கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர் அருண் ராஜ் வேட்பாளராக நிற்பார் என்றும் , அவரை அந்த தொகுதியின் நிர்வாகிகளுக்கு அறிமுகப்படுத்தி செங்கோட்டையனும் ஆனந்த்தும் பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News December 17, 2025
நாமக்கல் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

நாமக்கல் வனக்கோட்டத்தை சேர்ந்த 20 ஈரநிலங்களில் வரும் டிச.27 மற்றும் டிச.28 ஆகிய தேதிகளில் ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதில் தன்னார்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பறவைகளின் அசைவு பற்றிய புகைப்படம் எடுக்க ஆர்வம் உள்ள புகைப்பட வல்லுனர்கள், மற்றும் பறவை நிபுணர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் துர்காமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
News December 17, 2025
நாமக்கல் காவல்துறை சார்பில் மக்கள் குறைதீர் முகாம்

நாமக்கல் மாவட்ட காவல் துறையின் சார்பில், இன்று (டிசம்பர்.17) பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம், மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விமலா தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளையும், கோரிக்கைகளையும் தெரிவித்தனர். மேலும் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
News December 17, 2025
வரும் டிச.27, 28- ல் மின்கம்பி உதவியாளர் தகுதி தேர்வு!

நாமக்கல் கீரம்பூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், மின்கம்பி உதவியாளர் தகுதி தேர்வு வருகிற 27 மற்றும் 28-ந் தேதிகளில் நடைபெற உள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் தேர்வு தொடர்பான விவரங்கள் மற்றும் தேர்வு நுழைவுச்சீட்டினை கீரம்பூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு சென்று பெற்றுக்கொள்ளலாம் என நாமக்கல் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


