News August 12, 2025

திருச்சி: IT Company வேலைக்கு இலவச பயிற்சி!

image

IT வேலையென்றால் என்ன படிக்க வேண்டும், என்ன Skill வேண்டும் என்று பலர் தெரியாமல் உள்ளனர். டிகிரி முடித்தவர்கள் IT Company-யில் வேலையில் சேர தமிழ்நாடு அரசு வெற்றி நிச்சயம் திட்டத்தில் இலவசமாகவே Data Analytics using Python பயிற்சி அளிக்கப்பட்டு அதற்கான நுட்பங்கள் அனைத்தும் கற்றுத்தரப்படும். நீங்களும் இந்த பயிற்சி பெற விரும்பினால் இங்கே <>கிளிக் <<>>செய்து பதிவு செய்யலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News August 13, 2025

திருச்சி: லஞ்சம் வாங்கியவருக்கு 3 ஆண்டுகள் சிறை

image

திருச்சியை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவர் முறையாக அனுமதி பெற்று கட்டிய வீட்டிற்கு வரி நிர்ணயம் செய்வதற்காக ரூ.6,500 லஞ்சம் பெற்ற வழக்கில், முன்னாள் வருவாய் உதவியாளர் சுபேர்அலி கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் விசாரணையின் முடிவில், முன்னாள் வருவாய் உதவியாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News August 13, 2025

திருச்சி: அஞ்சல் ஊழியரிடம் தவறாக நடந்த காவலர் சிறையில் அடைப்பு

image

திருச்சி, பொன்மலையில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் பணிபுரியும் 25 வயது பெண் ஊழியர் 08.08.25 அன்று டூவீலரில் வேலைக்கு சென்றபோது மர்ம நபர் ஒருவர் வழிமறித்து மானபங்கம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட காணக்கிளியநல்லூர் காவல் நிலைய 2ஆம் நிலை காவலர் கோபாலகிருஷ்ணனை (32) கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News August 13, 2025

திருச்சி எம்.எல்.ஏ இனிகோ முதல்வருக்கு கடிதம்

image

திருச்சி எம்எல்ஏ இனிகோ, தமிழக முதலமைச்சருக்கு இன்று கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “நாடு முழுவதும் கல்லறை திருநாள் வரும் நவ-2ம் தேதி கடைபிடிக்கப்பட உள்ளது. இந்நிலையில் நவ.1, 2 ஆகிய தேதிகளில் ஆசிரியர்கள் தகுதி தேர்வான TNTED தேர்வு நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆகவே கல்லறை திருநாளை முன்னிட்டு இந்த தேர்வு தேதியை மாற்றி அமைத்து தர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!