News March 30, 2024
திருச்சி: IIM இல் 12வது ஆண்டு பட்டமளிப்பு விழா

திருச்சியில் உள்ள பிரபலமான இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மென்ட் எனப்படும் கல்வி நிறுவனத்தில் இன்று 12வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நிறுவன முதல்வர் பட்டங்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார். விழாவை சிறப்பிக்கும் விதமாக இந்நிறுவனத்தின் பயின்ற மாஜி மாணவர்களும் பங்கேற்றனர்.
Similar News
News September 19, 2025
திருச்சி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

கரூர் மாவட்டம், நல்லூர் போதைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் மோகன் ராஜ் (31). இவர் கடந்த 2017-ம் ஆண்டு 17 வயது சிறுமி ஒருவரை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்நிலையில் இவ்வழக்கின் விசாரணை திருச்சி மகிளா கோர்ட்டில் நீதிபதி சண்முகபிரியா முன்னிலையில் நடைபெற்றது. அப்போது பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மோகன் ராஜுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.20,000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
News September 19, 2025
திருச்சி: திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் நாளை (செப்.19) உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முசிறி ஒன்றியம் தா.பேட்டை லட்சுமி மஹாலிலும், மணிகண்டம் ஒன்றியம் அதவத்தூர் சமுதாயக்கூடத்திலும், புள்ளம்பாடி ஒன்றியம் டி.சங்கேந்தி சமுதாயக்கூடத்திலும், துறையூர் ஒன்றியம் முருகூர் பாலாஜி மஹாலிலும் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News September 19, 2025
திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மத்திய அரசின் ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் பயிலும், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகபிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் இன மாணவ, மாணவிகள் நடப்பு நிதியாண்டிற்கான கல்வி உதவித் தொகை விண்ணப்பிக்க, திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.