News August 12, 2025
திருச்சி: B.E முடித்தவர்களுக்கு ரூ.90,000 சம்பளத்தில் வேலை

பொதுத்துறை நிறுவனமான ‘தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்’ காப்பீடு நிறுவனத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள இன்ஜினீயர்கள், ஐ.டி நிபுணர்கள் உள்ளிட்ட 550 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E / B.Tech மற்றும் ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் <
Similar News
News August 12, 2025
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் முன்னாள் மேயர் மரணம்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி முன்னாள் மேயரும், திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் 31 வது வார்டு காங்கிரஸ் கட்சியின் மாமன்றஉறுப்பினருமான சுஜாதா உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். மூச்சுத் திணறல் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், இருதயத்திற்கு செல்லும் குழாயில் அடைப்பு ஏற்பட்டு இன்று காலை 9 மணியளவில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
News August 12, 2025
திருச்சி: சோழன் விரைவு ரயில் நேரம் மாற்றம்

திருச்சியில் இருந்து காலை 11 மணிக்கு புறப்படும் திருச்சி – சென்னை எழும்பூா் சோழன் விரைவு ரயில், வரும் 20-ஆம் தேதி மட்டும் பொறியியல் பணிகள் காரணமாக, சுமாா் 1.45 நிமிடங்கள் தாமதமாக பிற்பகல் 12:45 மணிக்குப் புறப்படும். மேலும் இந்த ரயில் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமாா் 15 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னா் இயக்கப்படும் என திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News August 12, 2025
திருச்சி டிஐஜி வருண்குமார் பணியிட மாற்றம்

தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி திருச்சி மாவட்ட எஸ்.பி-யாக பணியாற்றி, பதவி உயர்வு பெற்று திருச்சி சரக டி.ஐ.ஜி-யாக பொறுப்பு வகித்து வந்த வருண்குமார், சென்னை சிபிசிஐடி டி.ஐ.ஜி-யாக பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார். SHARE NOW !