News November 24, 2025
திருச்சி: 4 வயது சிறுவன் மீது கார் மோதி விபத்து

முசிறியை சேர்ந்த மரியே நேற்று தனது நான்கு வயது மகனுடன் குணசீலம் அருகே சாலையைக் கடப்பதற்காக நின்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே கார் ஓட்டி வந்த கோவிந்தன் என்பவர், காரை அலட்சியமாக ஓட்டி வந்ததில் 4 வயது சிறுவன் திவாகர் மீது மோதியல் அவர் காயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வாத்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News November 26, 2025
திருச்சி: போதை பொருள் விற்பனை கும்பல் கைது

ஸ்ரீரங்கம் பகுதியில் போலீசார் வாகன சோதனை ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்குரிய நபரை நிறுத்தி போலீசார் விசாரணை செய்ததில், அவர் போதை மாத்திரைகள் விற்பனை செய்யும் கும்பலை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், போதை மாத்திரை விற்பனை கும்பலைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4000 போதை மாத்திரைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
News November 26, 2025
திருச்சி: 15.38 லட்சம் எஸ்ஐஆர் படிவங்கள் பதிவேற்றம்

திருச்சி மாவட்டத்தில் எஸ்ஐஆர் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் உள்ள 23,68,967 வாக்காளர்களில் நேற்று (நவ.25) மாலை நிலவரப்படி 22,74,733 வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 15,38,829 வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் திரும்ப பெறப்பட்டு, செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News November 26, 2025
திருச்சி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

திருச்சி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


