News March 22, 2024
திருச்சி: 38 இலட்சம் பறிமுதல்

வையம்பட்டியில் நேற்று தேர்தல் பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏடிஎம்-ற்கு பணம் எடுத்துச் செல்லும் வாகனத்தை தணிக்கை செய்த போது உரிய ஆவணங்கள் இன்றி ரூ.38 இலட்சம் எடுத்துச் சென்றது தெரியவந்தது. பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் அதிகாரி குணசேகர் தலைமையிலான பறக்கும் படையினர் பணத்தை வட்டாட்சியர் தனலட்சுமியிடம் ஒப்படைத்த நிலையில் வருமானவரித் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News July 5, 2025
திருச்சி: முன்னாள் படை வீரர்களுக்கு அழைப்பு

திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான கிறிஸ்டோபர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி மாவட்டத்தில் சட்ட விழிப்புணர்வு, சமூக நலன் மற்றும் சட்ட உதவி செய்வதற்காக, மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழு சார்பில் முன்னாள் படைவீரர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதில் சேர விருப்பமுள்ளவர்கள் 0431-2460125 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
News July 5, 2025
திருச்சி: சொந்தமாக தொழில் தொடங்க கடன் உதவி

திருச்சி மாவட்டத்தில் கூலித்தொழில் செய்பவர்கள் சொந்தமாக தொழில் தொடங்க ‘கலைஞர் கைவினை’ திட்டம் மூலம் ரூ.50,000 முதல் ரூ.3 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. கடன் தொகையில் 25% சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இங்கு <
News July 5, 2025
ஸ்ரீரங்கம் பெருமாள் தரிசனம் இல்லை

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் ஜூலை 8-ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று மூலவர் பெரிய பெருமாளுக்கு ஜேஸ்டாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு, அன்று முழுவதும் மூலவர் பெரிய பெருமாளை தரிசனம் செய்ய இயலாது. மேலும், 9-ம் தேதி திருப்பாவாடை முன்னிட்டு மதியம் 3 மணிக்கு மேல் தான் மூலவர் பெரிய பெருமாளை தரிசனம் செய்ய இயலும் என கோயில் நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.