News January 28, 2026

திருச்சி: 131 கம்பெனிகள் மீது நடவடிக்கை

image

குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய பண்டிகை விடுமுறை தினத்தை முன்னிட்டு, திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள 178 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்காத 131 நிறுவனங்கள் கண்டறியப்பட்டு, அவற்றின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திருச்சி தொழிலாளர் உதவி ஆணையர் தங்கராசு தெரிவித்துள்ளார்.

Similar News

News February 13, 2026

திருச்சி: ரூ.5 லட்சம் காப்பீடு! APPLY NOW

image

மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் வருடத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கும் PM-JAY திட்டம் செயல்பட்டு வருகிறது. உங்கள் குடும்பத்தில் அவசர மருத்துவ தேவைக்கு பணம் பெற இனி அலைய தேவையில்லை. PM-JAY செயலியில் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து அவசர கால மருத்துவ செலவை பூர்த்தி செய்யலாம். இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய <>இங்கே கிளிக் <<>>செய்யவும். திட்டம் குறித்து தெரியாதவர்களுக்கு Share செய்து தெரியப்படுத்துங்கள்.

News February 13, 2026

திருச்சி: ஆம்புலன்ஸ் மோதி பெண் பலி

image

திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை நவலூர் குட்டப்பட்டு பகுதியில், சாலையை கடக்க முயன்ற பெண் மீது நேற்று புத்தாநத்தம் நோக்கி சென்ற ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளானது . இதில் தூக்கி வீசப்பட்ட பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து ராம்ஜி நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், இறந்த வயதான பெண்மணி தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கௌமாரி என தெரிய வந்தது.

News February 13, 2026

திருச்சியில் 152 பேர் கைது!

image

திருச்சி மத்திய மண்டல காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மணல் கடத்தியதாக வந்த புகார்களின் அடிப்படையில், நடப்பாண்டில் ஒரு மாதத்தில் மட்டும், மொத்தம் 147 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில், 152 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மணல் கடத்தலில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என, மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!