News October 19, 2025
திருச்சி: 1000 போலீசார் பாதுகாப்பு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்கள், கடை வீதிகள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் அதிகம் கூட வாய்ப்பு உள்ளது. இதனை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் மட்டும் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக எஸ்.பி தெரிவித்துள்ளார். மேலும் திருச்சி மாவட்டத்தில் காவல் உதவி தேவைப்படும் மக்கள் 89391 46100 என்ற தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 20, 2025
லால்குடி: கொள்ளிடம் ஆற்றில் ஆண் சடலம் மீட்பு

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே இடையாற்றுமங்கலம் தண்ணீர்பந்தல் கொள்ளிடம் ஆற்றின் நடுவே அடையாளம் தெரியாத ஒரு ஆண் சடலம் கிடப்பதாக பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் லால்குடி தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து லால்குடி போலீசார் உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News October 20, 2025
திருச்சி: மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!

பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் 1101 பயிற்சி காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வயது: 18 வயது பூர்த்தி
2. சம்பளம்: ரூ.10,000 – ரூ15,000
3. கல்வித் தகுதி: பட்டப்படிப்பு மற்றும் ITI
4. கடைசி தேதி: 21.10.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
6. இத்தகவலை மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News October 20, 2025
திருச்சி: கடும் விலை உயர்வு!

தீபாவளி பண்டிகையையொட்டி திருச்சியில் பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்து உள்ளது. திருச்சி காந்தி மார்க்கெட்டில் நேற்று 1 கிலோ மல்லிகை பூ ரூ.3,000-க்கும், முல்லைப் பூ ரூ.3,000-க்கும், ஜாதிப் பூ ரூ.2,000-க்கும், செவ்வந்தி பூ ரூ.1000-க்கும் விற்பனையானது. இதனால் மார்க்கெட்டில் பூ வாங்க பொதுமக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். பூக்களின் வரத்து குறைவே விலை உயர்வுக்கு காரணம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.