News November 20, 2025
திருச்சி: 100 வயது முதியவர் மாயம்!

மணப்பாறை அருகே உள்ள காரமேட்டுபட்டியை சேர்ந்தவர் வெள்ளையகவுண்டர். 100 வயதான இவர் கடந்த 17-ந் தேதி வீட்டை விட்டு சென்ற நிலையில், மீண்டும் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக அவரது மகன் கோபாலகிருஷ்ணன் மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 26, 2025
திருச்சி: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்

கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு வரும் டிச.4-ம் தேதி நெல்லை சந்திப்பிலிருந்து, திருவண்ணாமலைக்கு திருச்சி வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இது நெல்லையிலிருந்து இரவு (டிச-3) 9:30 மணிக்கு புறப்பட்டு, அதிகாலை 3:30 மணிக்கு திருச்சி வந்தடைகிறது. பின்னர் மீண்டும் திருச்சியில் இருந்து 03:45-க்கு புறப்பட்டு, டிச.4-ம் தேதி காலை 8 மணி அளவில் திருவண்ணாமலை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 26, 2025
திருச்சி: வெளிநாட்டு மாணவர் சிறையில் அடைப்பு

புதுச்சேரியில் விசா காலம் முடிவடைந்தும், சட்டவிரோதமாக தனியார் விடுதியில் தங்கியிருந்த, ருவாண்டா நாட்டை சேர்ந்த மாணவர் சேமா மன்சி பப்ரீஷ் (35) என்பவரை, வெளிநாட்டினர் பிராந்திய பிரிவு அதிகாரிகள் நேற்று கைது செய்து, திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் ஒப்படைத்தனர். அங்கு உரிய விசாரணைக்கு பின் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மூலம் அவர் ருவாண்டா நாட்டுக்கு நாடு கடத்தப்படுவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
News November 26, 2025
திருச்சி: போதை பொருள் விற்பனை கும்பல் கைது

ஸ்ரீரங்கம் பகுதியில் போலீசார் வாகன சோதனை ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்குரிய நபரை நிறுத்தி போலீசார் விசாரணை செய்ததில், அவர் போதை மாத்திரைகள் விற்பனை செய்யும் கும்பலை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், போதை மாத்திரை விற்பனை கும்பலைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4000 போதை மாத்திரைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


