News February 11, 2025
திருச்சி: வெளிநாட்டு பணம் பறிமுதல்

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் மூலம் இன்று 10.02.25 திருச்சி விமான நிலையம் வந்த பெண் பயணி ஒருவரின் உடைமைகளை சோதனை செய்தபோது, அதில் ₹.3.95 லட்சம் மதிப்புடைய 271 வெளிநாட்டு நோட்டுகள் மற்றும் ₹.4.50 லட்சம் இந்திய ரூபாய் என ₹.8.45 லட்சம் பணத்தை உரிய அனுமதியின்றி எடுத்து வந்தது தெரிய வந்தது. பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் பயணியிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News March 3, 2026
திருச்சி: தாட்கோ சார்பில் பயிற்சிகள் அறிவிப்பு

தாட்கோ சார்பில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, விமான முன்பதிவு ஆளுமை மற்றும் கேபின் குழு பணியாளர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியினை முழுமையாக முடித்த பிறகு தகுதியுள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும். இப்பயிற்சியில் சேர விரும்புவோர் www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News March 2, 2026
திருச்சி: குறைதீர் கூட்டத்தில் 717 மனுக்களுக்கு தீர்வு

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தெருவிளக்கு, தண்ணீர் இணைப்பு, தொகுப்பு வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டுவது தொடர்பான மனுக்கள், கல்வி உதவித்தொகை மனுக்கள் என 717 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News March 2, 2026
திருச்சி: ATM கார்டு இருக்கா ? ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ்!

திருச்சி மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – ரூ.10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதுக்கு நீங்க எந்த காசும் கட்ட தேவையில்லை. உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினா போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா <


