News February 27, 2025

திருச்சி: விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (பிப்.28) காலை 10.30 மணிக்கு பிப்ரவரி மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு நீர்ப்பாசனம், வேளாண்மை இடு பொருட்கள், வேளாண்மை தொடர்பான கடனுதவிகள் மற்றும் மேம்பாட்டிற்கான நல திட்டங்கள் குறித்து தெரிவித்து பயனடையும் படி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 5, 2026

திருச்சி: ரூ.2.10 லட்சம் மானியம்!

image

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தில் மாட்டு கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதில் 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-மும், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News April 5, 2026

திருச்சி: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

image

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <>இங்கே கிளிக் செய்து<<>> பதிவு செய்யலாம். மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க.

News April 5, 2026

திருச்சி மாவட்டத்தில் 100.2 மி.மீ மழை பதிவு!

image

திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று (ஏப்.4) திடீர் மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக புள்ளம்பாடி பகுதியில் 18.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும் நந்தியார் அணை பகுதியில் 18.2 மி.மீ, கொப்பம்பட்டி பகுதியில் 17 மி.மீ, துறையூர் பகுதியில் 15 மி.மீ என மாவட்டம் முழுவதும் 100.2 மில்லி மீட்டரும், சராசரியாக 4.18 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!