News January 17, 2026
திருச்சி: விரைவு ரயில் நின்று செல்லும் என அறிவிப்பு

சோழன் விரைவு இரயில் திருவெறும்பூர் இரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்ற அறிவிப்பை ஜன.15-ம் தேதி ஒன்றிய இரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், “விரைவில் திருவெறும்பூரில் சோழன் விரைவு ரயில் நின்று செல்லும் இந்த அறிவிப்பு மகிழ்ச்சி அளிப்பதாக திருச்சி எம்.பி துரை வைகோ இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News January 21, 2026
திருச்சி: தண்டவாளத்தில் தலை துண்டித்து பலி

மணப்பாறை ரயில் நிலையம் அருகே இன்று அதிகாலை சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் தண்டவாளத்தின் குறுக்கே தலையை வைத்து படுத்துள்ளார். அப்போது ரயில் நிலையத்தில் நின்று புறப்பட்ட ரயில் ஏறியதில், தலை துண்டித்து, பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் உடலை கைப்பற்றி ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
News January 21, 2026
திருச்சி – காரைக்கால் ரயில் ரத்து

திருச்சி – காரைக்கால் ரயில் நான்கு தினங்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி – காரைக்கால் டெமு ரயிலானது வரும் 22, 24, 27, 29 ஆகிய தேதிகளில், தஞ்சாவூர் – காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து தஞ்சாவூர் வரை மட்டுமே இயக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.