News July 8, 2025

திருச்சி விமான நிலையம் முதலிடம்

image

சர்வதேச விமான நிலைய கவுன்சிலிங்கான ஏசிஐ, 3 மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்து தரவரிசை பட்டியலை வெளியிடுவது வழக்கம். அதன்படி 2025 ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், இந்தியா, சீனா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் அடங்கியுள்ள பசிபிக் பகுதிகளில் திருச்சி விமான நிலையம் 4.94 புள்ளிகள் பெற்று சர்வதேச அளவில் 54-வது இடமும், இந்திய அளவில் முதலிடமும் பெற்றுள்ளது.

Similar News

News August 23, 2025

திருச்சி: பெல் நிறுவனத்தில் வேலை

image

மத்திய அரசின் பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல் நிறுவனத்தில் (BHEL) காலியாக உள்ள எலெக்ட்ரிஷியன், பிட்டர், வெல்டர் உள்ளிட்ட 515 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஐடிஐ படித்த 27 வயதுக்குட்பட்ட (SC/ST- 32, OBC-30) நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.29,500 முதல் ரூ.65,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<> இங்கே கிளிக்<<>> செய்து, விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News August 23, 2025

திருச்சி என்.ஐ.டி – இல் வேலை வாய்ப்பு

image

திருச்சி என்.ஐ.டி எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் துறையில் காலியாக உள்ள ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ மற்றும் ப்ராஜெக்ட் அசோசியேட் பணிக்கு வரும் 26ஆம் தேதி நேர்முகத்தேர்வு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்புவோர் www.nitt.edu என்ற தளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, அசல் சான்றிதழ்களை இணைத்து நேர்முகத் தேர்வின் போது சமர்ப்பிக்க வேண்டும் என கல்லூரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 23, 2025

திருச்சி: இலவச தையல் இயந்திரம் பெற அழைப்பு

image

திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், பல்வேறு வகையான குறைபாடு உடைய மாற்றத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது தேசிய அடையாள அட்டையுடன் <>www.tnesevai.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 0431-2412590 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!