News August 12, 2024
திருச்சி விமான நிலையத்திற்கு பேருந்து சேவை

திருச்சி விமான நிலையத்திற்கு ஆட்டோக்கள் எதுவும் உள்ளே வராத காரணத்தினால் தனியார் டாக்ஸி மூலம் 30 ரூபாய் செலுத்தி நுழைவு வாயில் வரை செல்லலாம் என்று விமான நிலைய நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்து வந்தது. தற்போது மத்திய பேருந்து நிலையத்திலிருந்து விமான நிலையத்தில் புதிய முனையம் வரையிலும் பேருந்து இயக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News March 6, 2026
திருச்சி: விமானம் ரத்து – அவசர எண்கள் அறிவிப்பு

திருச்சி விமான நிலையத்திலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் மூன்று முக்கிய நகரங்களுக்கு செல்லும் விமான சேவைகள், ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக தொடர்ந்து 5-வது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் பயணிகள் தங்களது விமான பயணம் குறித்த நேரடி தகவல்களை பெறுவதற்கு 0431-2341755, 0431-2341766, 93116-20097 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என திருச்சி விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News March 6, 2026
திருச்சி: காய்ச்சலால் 1 வயது குழந்தை உயிரிழப்பு

முசிறி அருகே மணலி அய்யம்பட்டியைச் சேர்ந்த அனன்யா என்ற 1 வயது குழந்தைக்கு காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் சிகிச்சைக்காக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றபோது, குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
News March 6, 2026
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; 276 மாணவர்கள் ஆப்சென்ட்

திருச்சி மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 2ம்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தேர்வில், மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 134 மையங்களில் 258 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் எழுதி வருகின்றனர். அவ்வகையில் 2வது தேர்வாக ஆங்கில மொழிப்பாடத்தேர்வு நேற்று நடைபெற்றதில், 30,748 மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர். மேலும் 276 தேர்வு எழுத வரவில்லை என அலுவலர்கள் தெரிவித்தனர்.


