News July 27, 2024

திருச்சி விமான நிலையத்தில் ஆட்டோக்களுக்கு தடை

image

திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையத்துக்கு ஆட்டோ போக்குவரத்துக்கு அனுமதியில்லை என்றும், ஆட்டோக்கள் நுழைய தடை என்று அறிவித்து விளம்பர பலகை திருச்சி விமான நிலையம் சார்பில் இன்று வைக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் உத்தரவால், ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆட்டோக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Similar News

News March 3, 2026

திருச்சி: மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர்!

image

​தொட்டியம் அருகே உள்ள அயினாபட்டியில், குடும்பப் பிரச்சனை காரணமாக லாவண்யா (26) என்ற பெண்ணை அவரது கணவர் பொன்னர் (29) அரிவாளால் வெட்டியுள்ளார். மேலும் தடுக்க வந்த லாவண்யாவின் உறவினர்கள் சரண்யா மற்றும் கன்னியம்மாள் ஆகியோரையும் அவர் தாக்கியுள்ளார். காயமடைந்த மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தொட்டியம் போலீசார், பொன்னாரை கைது செய்தனர்.

News March 3, 2026

திருச்சி: தாட்கோ சார்பில் பயிற்சிகள் அறிவிப்பு

image

தாட்கோ சார்பில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, விமான முன்பதிவு ஆளுமை மற்றும் கேபின் குழு பணியாளர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியினை முழுமையாக முடித்த பிறகு தகுதியுள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும். இப்பயிற்சியில் சேர விரும்புவோர் www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News March 2, 2026

திருச்சி: குறைதீர் கூட்டத்தில் 717 மனுக்களுக்கு தீர்வு

image

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தெருவிளக்கு, தண்ணீர் இணைப்பு, தொகுப்பு வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டுவது தொடர்பான மனுக்கள், கல்வி உதவித்தொகை மனுக்கள் என 717 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!