News January 28, 2026
திருச்சி: விபத்தில் கல்லூரி மாணவி பலி

திருச்சியில் இருந்து முக்கொம்பு சுற்றுலா மையத்திற்கு சென்று விட்டு திரும்பி கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் பைக் மீது, கோவை நோக்கி சென்ற அரசு பேருந்து மோதியது. இதில் தூக்கிவீசப்பட்டு தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த சாலினி (21) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த மாணவர் திருச்சி GH-ல் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஜீயபுரம் போலீசார் வழக்கு பதிந்து பேருந்து ஓட்டுநரை கைது செய்தனர்.
Similar News
News February 9, 2026
திருச்சி: பெண் குழந்தை உள்ளதா? இதோ ரூ.50,000!

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு திருச்சி மாவட்ட சமூக நல அலுவலர் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
News February 9, 2026
திருச்சி: 4 போலீசார் அதிரடி சஸ்பெண்ட் !

நவல்பட்டு பகுதியை சேர்ந்தவர் வசந்த குமார். திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவரை, கோர்ட்டில் ஆஜர்படுத்த திருச்சி மாநகர போலீசார் அழைத்து சென்றுள்ளனர். அப்போது வசந்தகுமார் தன் உடலில் கஞ்சாவை மறைத்து வைத்து, அதனை மீண்டும் சிறைக்குள் எடுத்து சென்றுள்ளார். இந்நிலையில் கைதி காவலில் அலட்சியமாக செயல்பட்ட போலீசார் 4 பேரை திருச்சி போலீஸ் கமிஷனர் காமினி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
News February 9, 2026
திருச்சி: தீப்பிடித்து வீடு எரிந்து நாசம்

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் முத்துராஜா தெருவில் வசித்து வரும் கிருஷ்ணவேணி (70) என்ற மூதாட்டி அடுப்படியில் வைத்த எண்ணெய் பாக்கெட் வெப்பத்தால் தீப்பிடித்தது. அவர் அணைக்க முயன்று தண்ணீரை ஊற்றியதால் தீ கூரைக்கு பரவி வீடு எரிந்தது. அக்கம் பக்கத்தினர் உடனடியாக தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். மூதாட்டி காயமின்றி தப்பினார். இதில் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.


