News September 14, 2025

திருச்சி: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

image

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் புலனாய்வுத் துறையில் காலியாக உள்ள இளநிலை புலனாய்வு அதிகாரி (Junior Intelligence Officer-II) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.. இதற்கு B.sc முடித்திருந்தால் போதும். மாதம் ரூ. 25,500 – 81,100 வரை சம்பளமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து, விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க இன்றே (செப்.14) கடைசி நாளாகும். SHARE NOW!

Similar News

News September 14, 2025

திருச்சி: மக்கள் நீதிமன்றத்தில் 5168 வழக்குகளுக்கு தீர்வு

image

திருச்சி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது. இதில் திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் 12 அமர்வுகள் மற்றும் முசிறி, துறையூர், மணப்பாறை, லால்குடி, ஸ்ரீரங்கம், தொட்டியம் என மொத்தம் 22 அமர்வுகளில் பல்வேறு வழக்குகள் சமரசத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் ரூ.57.37 கோடி மதிப்புடைய 5,168 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இந்நிகழ்வில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

News September 14, 2025

திருச்சி: பள்ளி மாணவன் தற்கொலை

image

திருச்சி பாலக்கரை பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் இருந்தனர். இவரது இளைய மகன் திருச்சியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். மாணவனின் மூத்த சகோதரர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துள்ளார். இதனால் மிகுந்த மனவேதனையில் இருந்த மாணவன் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News September 14, 2025

திருச்சி: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை

image

திருச்சி மக்களே, Bank வேலைக்கு போக ஆசை இருக்கா? இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாகவுள்ள 127 Specialist Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வந்துள்ளது.
✅பணி: Specialist Officer
✅கல்வி தகுதி: B.E./B.Tech, MBA, M.Sc,
✅சம்பளம்: ரூ.64,820
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
✅வயது வரம்பு: 24 முதல் 40 வரை
✅கடைசி தேதி: 03.10.2025
✅இத்தகவலை இப்போதே உங்க நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!