News January 13, 2026
திருச்சி: விசைத்தறியாளர்களுக்கு மானியம் அறிவிப்பு

விசைத்தறி துறையில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், வழக்கமான தறிகளை தரம் உயர்த்துதல், நாடா இல்லா ரேபியர் தறிகள் கொள்முதல் செய்தல் ஆகியவற்றிற்கு மானியம் வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://tnhandlooms.tn.gov.in/pms என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு கைத்தறி உதவி இயக்குனரகத்தை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 22, 2026
திருச்சி – புது ஜல்பைகுரி அதிவிரைவு ரயில் விவரம்!

திருச்சி – புது ஜல்பைகுரி (மேற்குவங்கம்) அதிவிரைவு ரயிலானது (20610) வரும் 28 ஆம் தேதி முதல் புதன்கிழமைகளில் திருச்சியிலிருந்து காலை 5.45 மணிக்கு இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் 22 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு தஞ்சை, சென்னை எழும்பூா், விஜயவாடா, விசாகப்பட்டினம், கோரக்பூா், அந்தூல், டங்குரி, போல்பூா் வழியாக புது ஜல்பைகுரிக்கு வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு சென்றடையும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News January 22, 2026
திருச்சி – பாலக்காடு விரைவு ரயில் ரத்து

திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்திலிருந்து நாள் தோறும் பகல் 1 மணிக்கு புறப்படும், திருச்சி – பாலக்காடு விரைவு ரயிலானது, பொறியியல் பணிகள் காரணமாக வரும் 27ஆம் தேதி பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் கரூர் ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 2:20 மணிக்கு புறப்பட்டு பாலக்காடு சென்றடையும் என, திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 22, 2026
திருச்சி: பயணிகள் ரயில் ரத்து

பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி – கரூர் பயணிகள் ரயில் ஒரு நாள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி – கரூர் பயணிகள் ரயிலானது (76809) வரும் ஜன.27ஆம் தேதி ஒரு நாள் மட்டும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. எனவே பயணிகள் தங்களது பயணத்திட்டங்களை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


