News February 11, 2026
திருச்சி: வாரச்சந்தையில் பைக் திருட்டு-2 பேர் கைது

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் வாரச்சந்தையில் ரமேஷ் என்பவரின் பைக்கை திருடிய, கரூரைச் சேர்ந்த ரமேஷ் (32), அஜித்குமார் (26) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். காய்கறி வியாபாரம் செய்துகொண்டே கைவரிசை காட்டிய இவர்களிடமிருந்து 2 பைக்குகள் மற்றும் ஒரு வேன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது குறித்து காட்டுப்புத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 20, 2026
திருச்சி: மாவட்ட கண்காணிப்பு அதிகாரி நியமனம்

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்களை கண்காணிக்க மாவட்ட வாரியாக கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி திருச்சி மாவட்ட கண்காணிப்பு அதிகாரியாக, அரசு தேர்வுகள் இயக்குனரக இணை இயக்குனர் டி.ராஜேந்திரனை நியமனம் செய்து, பள்ளிக்கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்திரமோகன் உத்தரவிட்டுள்ளார்.
News February 20, 2026
திருச்சி: உங்க போனுக்கு தேவை இல்லாத CALL வருகிறதா?

திருச்சி மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News February 20, 2026
உள்நாட்டு பயணிகள் வருகை – திருச்சி முதலிடம்!

தமிழ்நாட்டில் 2025-ம் ஆண்டில், உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகையில், திருச்சி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளதாக சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது. அவ்வகையில் திருச்சியில் உள்ள ஶ்ரீரங்கம், சமயபுரம் உள்ளிட்ட ஆன்மீக தலங்கள், முக்கொம்பு உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு 3,13,17,745 பேர் வருகை தந்துள்ளனர். கடந்த 2024-ம் ஆண்டை ஒப்பிடுகையில் பயணிகள் வருகை கணிசமாக உயர்ந்துள்ளதாக சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.


