News August 5, 2025
திருச்சி: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!

திருச்சியில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.
Similar News
News August 6, 2025
திருச்சி: உங்களுடன் ஸ்டாலின் முகாமில் குவிந்த 2968 மனுக்கள்

திருச்சி மாவட்டத்தில் 6 இடங்களில் நேற்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. அதில் திருச்சியில் 895 மனுக்களும், துறையூரில் 194 மனுக்களும், புள்ளம்பாடியில் 552 மனுக்களும், தாளக்குடியில் 260 மனுக்களும், தண்டலைப்புத்தூரில் 541, முருங்கையில் 526 மனுக்களும் என மொத்தம் 2968 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டதாக திருச்சி மாவட்ட கலெக்டர் வே.சரவணன் தெரிவித்துள்ளார்.
News August 6, 2025
திருச்சியில் வேலை: கலெக்டர் அறிவிப்பு

மிஷன் வத்சல்யா திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகில் ஒரு வருட கால தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இதற்கான விண்ணப்ப படிவத்தை <
News August 6, 2025
ஈரோடு – திருச்சி பயணிகள் ரயில் பகுதியாக ரத்து

திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு – திருச்சி பயணிகள் ரயிலானது வரும் ஆக.,19-ம் தேதி காலை 8:10 மணிக்கு ஈரோட்டில் இருந்து புறப்பட்டு திருச்சி கோட்டை ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். அன்றைய தினம் மட்டும் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு இந்த ரயில் இயக்கப்படாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.