News January 3, 2026

திருச்சி: வலிப்பு நோயால் ஏற்பட்ட விபரீதம்!

image

முசிறி தண்டலை பகுதியைச் சேர்ந்தவர் சிலம்பரசன் (33). இவர் வலிப்பு பிரச்சனையால் பாதிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று தண்டலை பகுதியில் உள்ள ஒரு குளத்தில் அவர் மீன் பிடித்து கொண்டிருந்த போது, அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது தண்ணீரில் மயங்கி விழுந்த அவர், நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து முசிறி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Similar News

News January 10, 2026

திருச்சி: 3 நாட்களுக்கு ரயில் ரத்து!

image

பொறியியல் பணிகள் காரணமாக, திருச்சி – காரைக்கால் டெமு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி – காரைக்கால் டெமு ரயிலானது வரும் 11, 14, 20 ஆகிய தேதிகளில், திருவாரூர் – காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சியில் இருந்து திருவாரூர் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 10, 2026

திருச்சி: பொருளாதார குற்றப்பிரிவு முக்கிய அறிவிப்பு

image

திருச்சி துறையூரை சேர்ந்த அப்பாதுரை என்பவர் “ஸ்ரீ மாரியம்மன் சிட்ஃபண்ட்ஸ்” என்ற பெயரில் தீபாவளி சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக, அவர் மீது பொருளாதார குற்றப்பிரிவு மூலம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே மேற்கண்ட சிட்பண்ட்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டவர்கள், திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 10, 2026

திருச்சி: அரசுப் பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு

image

திருச்சி மக்களே, பொங்கல் பண்டிக்கைக்கு வெளி ஊர்களில் இருந்து சொந்த ஊருக்கு அரசுப் பேருந்துகள் மூலம் செல்ல உள்ளீர்களா? இத எண்களை நோட் பண்ணி வச்சிக்கோங்க!
1. பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் – 1800 599 1500
2. Luggage தொலைந்து போனால் – 044-49076326
3. ஓட்டுநர் / நடத்துநர் குறித்த புகார் – 1800 599 1500
4. இந்த தகவல் மற்றவர்களுக்கு பயன்பெற SHARE பண்ணுங்க!

error: Content is protected !!