News January 18, 2026
திருச்சி: வரன் பார்க்க சென்றவர் பலி

திருப்பூர் மாவட்டம் புழுவப்பட்டியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் மகனுக்கு வரன் பார்க்க டூவீலரில் சென்றபோது, நடுப்பட்டி அடுத்த சரளப்பட்டி அருகே பின்னால் வந்த கார் எதிர்பாராத விதமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே ராமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் படுகாயம் அடைந்த அவரது மனைவியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வையம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News February 1, 2026
திருச்சி: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

திருச்சி மக்களே உங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். இதனை SHARE செய்து மற்றவர்களுக்கும் தெரியபடுத்துங்க.
News February 1, 2026
திருச்சி: காவல் ஆய்வாளர்கள் பணியிடமாற்றம்

திருச்சி மத்திய மண்டல காவல்துறைக்கு உட்பட்ட மாவட்டங்களில் அனைத்து மகளிர் காவல் நிலையம், சட்டம் ஒழுங்கு, சைபர் கிரைம், சிபிசிஐடி உள்ளிட்டவற்றில் ஆய்வாளராக பணிபுரிந்த 47 பேரை, பணியிடமாற்றம் செய்து மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். தேர்தல் விதிமுறைகள் மற்றும் நிர்வாக காரணங்களுக்காக, ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 1, 2026
திருச்சி: வேன் கவிழ்ந்து விபத்து – 14 பேர் காயம்

திருச்சி-சேலம் நெடுஞ்சாலையில் உமையாள்புரம் அருகே மேல்மருவத்தூர் பக்தர்கள் சென்ற வேன் கட்டுப்பாட்டை இழந்து நேற்று இரவு கவிழ்ந்தது. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் ஆன்மீகப் பயணம் முடிந்து திரும்பியபோது இந்த விபத்து நேரிட்டது. இதில் வேனில் பயணித்த 14 பேர் காயமடைந்தனர். படுகாயமடைந்த 6 பேர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முசிறி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


