News December 27, 2025

திருச்சி: லஞ்சம் வாங்கிய போலிஸுக்கு சிறை

image

திருவெறும்பூர் – நவல்பட்டு சாலையில், குணசேகரன் என்பவரிடம் கடந்த 2019-ம் ஆண்டு பாய்லர் பிளாண்ட் காவல் நிலைய ஏட்டு ராமசாமி என்பவர், ‘உனக்கு அரெஸ்ட் வாரண்ட் வந்துள்ளது’ என மிரட்டி ரூ.10,000 லஞ்சம் பெற்றபோது கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். இவ்வழக்கின் விசாரணை நேற்று திருச்சி நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில் ராமசாமிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி புவியரசு தீர்ப்பளித்தார்.

Similar News

News December 27, 2025

திருச்சி: ரேஷன் கார்டு பிரச்னைகளுக்கு தீர்வு

image

தமிழக அரசு <>TNePDS<<>> என்ற ரேஷன் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதில் குடும்ப தலைவர்கள் பதிவு செய்வதன் மூலம் ரேஷன் சம்பந்தமான தகவல், நமக்கு எவ்வளவு பொருள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலாம். மேலும் இதிலுள்ள புகார் பக்கத்தில் ரேஷன் கடை/ பொருள் குறித்த உங்களது குறைகளையும் தெரிவிக்கலாம். இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

News December 27, 2025

திருச்சி – சென்னை இடையே புத்தம் புதிய பேருந்துகள் அறிமுகம்

image

திருச்சி – சென்னை இடையே புதிய SETC ஏசி மல்டி ஆக்சில் வோல்வோ பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பஞ்சப்பூரிலிருந்து நாள்தோறும் மதியம் 1 மணிக்கும், இரவு 11 மணிக்கும் இந்த பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல சென்னையில் இருந்தும் திருச்சிக்கு இந்த பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தனியார் வோல்வோ பேருந்துகளை விட இந்த பேருந்தில் கட்டணம் குறைவாக இருப்பதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News December 27, 2025

திருச்சி: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்!

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <>pmay-urban.gov.in <<>>என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

error: Content is protected !!