News August 6, 2025
திருச்சி: ரூ.64,000 சம்பளத்தில் Bank-யில் வேலை!

வங்கி வேலை கனவு நினைவாக போகுது! SBI வங்கியில் 5180 Junior Associates (Customer Support and Sales) பிரிவுகளில் 5180 பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வந்துள்ளது. ஏதேதும் ஒரு டிகிரி முடித்திருந்தாலே போதும். மூன்று கட்ட தேர்வுகள் நடைபெறும். மாத சம்பளம் ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். உங்களில் போனில் இருந்தே விண்ணப்பிக்க இங்கே <
Similar News
News August 7, 2025
திருச்சி: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

சத்யவாணி முத்து அம்மையார் இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவைச் சேர்ந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள் (ஆண், பெண்) ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகிலுள்ள இ-சேவை மையம் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு திருச்சி சமூக நல அலுவலரை (0431-2413796) அணுகவும். SHARE பண்ணுங்க!
News August 7, 2025
திருச்சி: தாய்ப்பால் தானம் செய்ய அழைப்பு

திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள பால் வங்கிக்கு இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை 639 பாலூட்டும் தாய்மார்களிடம் இருந்து 192 லிட்டர் தாய்ப்பால் பெறப்பட்டுள்ளது. இது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் 634 பிறந்த குழந்தைகளின் நலனுக்கு உதவியுள்ளது. இந்த அளவு குறிப்பிடத்தக்கதாக இருந்தாலும் இன்னும் அதிகமான தாய்மார்கள் முன்வந்து தானம் செய்ய வேண்டும் என அரசு மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
News August 6, 2025
உடையாம்பட்டியில் பிடிப்பட்ட 10அடி மலைப்பாம்பு

துவரங்குறிச்சி அடுத்த உடையாம்பட்டியை சேர்ந்த வெள்ளைச்சாமி. இவரது தோட்டத்தில் விவசாய வேலை செய்து கொண்டிருந்த போது தோட்டத்தின் அருகே சுமார் 10அடி நீளம் மலைப்பாம்பு ஒன்று இருந்தது. இதையறிந்த துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினர் சிறிது நேரம் போராட்டத்திற்கு பின்பு பாம்பு பிடிப்பான் உதவியுடன் மலை பாம்பினை லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதை வனத்துறையினர் பாதுகாப்பு வனப்பகுதியில் விட்டனர்.