News July 8, 2025
திருச்சி: ரூ.12 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல்

பேங்காக்கில் இருந்து கோலாலம்பூர் வழியாக நேற்று (ஜூலை.07) இரவு திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை, விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ஒரு பயணியின் உடைமையில் சுமார் ரூ.12 கோடி மதிப்பிலான, 11.8 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள் பயணியிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News July 8, 2025
திருச்சி: 70% மானியத்தில் சோலார் பம்புசெட்

தமிழக அரசு விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சூரிய ஒளியில் இயங்கும் பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது. 70 சதவீதத்தில் 40 % மாநில அரசும், 30% மத்திய அரசும் வழங்குகிறது. இதற்கு <
News July 8, 2025
திருச்சி: கோழி பண்ணை அமைக்க 50% மானியம் (1/2)

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு சார்பில் கோழி பண்ணை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 250 கோழி குஞ்சுகள் வீதம் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் கோழி கொட்டகை, உபகரணங்கள், 4 மாதங்களுக்கு தேவையான தீவனம் என மொத்த செலவில் 50 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் உங்கள் அருகிலுள்ள கால்நடை மருத்துவமனையில் விண்ணப்பிக்லாம். ஷேர் பண்ணுங்க! <<16989920>>(பாகம்-2)<<>>
News July 8, 2025
திருச்சி: கோழி பண்ணை அமைக்க 50% மானியம் (2/2)

▶️ இதற்கு தகுதியாக குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் சொந்தமாக இருக்க வேண்டும்
▶️ மின் இணைப்பு இருக்க வேண்டும்
▶️ ஏற்கனவே நாட்டுக்கோழி திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகள் மற்றும் குடும்பத்தினர் மானியம் பெற தகுதி இல்லை
▶️ தேர்வு செய்யப்படும் பயனாளி 3 வருடங்களுக்குக் குறையாமல் பண்ணையைப் பராமரிக்க உறுதி அளிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!