News October 8, 2025
திருச்சி – ராமேஸ்வரம் ரயில் ரத்து!

பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி – ராமேஸ்வரம் விரைவு ரயிலானது இன்று (அக்.8) மற்றும் அக்.9, 10, 13 ஆகிய தேதிகளில் மானாமதுரை – ராமேஸ்வரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சியில் இருந்து மானாமதுரை வரை மட்டுமே இயக்கப்படும் என திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 8, 2025
திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் திருச்சி மாவட்டத்தில் 11, 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வரும் 14-ம் தேதியும், கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் வரும் 15-ம் தேதியும், தெப்பக்குளம் பிஷப் ஹீபர் பள்ளியில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் ஆட்சியரகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சித் துறையை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்
News October 8, 2025
திருச்சி வந்த துணை முதலமைச்சர்

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெறும் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து விமான மூலம் புறப்பட்டு, திருச்சி வந்தடைந்தார். அவரை அமைச்சர் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் உள்ளிட்டோர் நேரில் சென்று வரவேற்றனர்.
News October 8, 2025
திருச்சி: ரயில்வேயில் கொட்டிக் கிடக்கும் வேலை

இந்திய ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் 5,800 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
4. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
5. ஆரம்ப தேதி: 21.10.2025
6. கடைசி தேதி: 20.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <