News August 20, 2025

திருச்சி: ரயில் பயண சீட்டு விற்பனை முகவர் வேலை

image

திருச்சி மாவட்டத்தின் குமாரமங்கலம், கல்பட்டிசத்திரம், கொளத்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் பயண சீட்டு விற்பனை முகவர் வேலைக்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு திருச்சி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். விருப்பமுள்ளவர்கள் <>sr.indianrailways.gov.in<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, ஆக.25-க்குள் மதுரை ரயில்வே கோட்ட அலுவலகத்தில் அளிக்க வேண்டும். SHARE NOW!

Similar News

News August 20, 2025

திருச்சி: கோழி பண்ணை அமைக்க 50% மானியம்

image

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தமிழக அரசு சார்பில் கோழி பண்ணை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 250 கோழி குஞ்சுகள் வீதம் இலவசமாக வழங்கப்படுகின்றன. மேலும் கோழி கொட்டகை, உபகரணங்கள், 4 மாதங்களுக்கு தேவையான தீவனம் என மொத்த செலவில் 50 % மானியமும் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் தங்கள் அருகிலுள்ள கால்நடை மருத்துவமனையில் விண்ணப்பிக்லாம். ஷேர் பண்ணுங்க <<17460250>>தொடர்ச்சி<<>>

News August 20, 2025

திருச்சி: கோழி பண்ணை அமைக்க 50% மானியம் (2/2)

image

▶️ இத்திட்டத்தில் விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் சொந்தமாக இருக்க வேண்டும்
▶️ மின் இணைப்பு இருக்க வேண்டும்
▶️ ஏற்கனவே நாட்டுக்கோழி திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகள் மற்றும் குடும்பத்தினர் மானியம் பெற தகுதி இல்லை
▶️ தேர்வு செய்யப்படும் பயனாளி 3 வருடங்களுக்குக் குறையாமல் பண்ணையைப் பராமரிக்க உறுதி அளிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News August 20, 2025

ரயில் பயண சீட்டு விற்பனை முகவர் பணி: தெற்கு ரயில்வே அறிவிப்பு

image

திருச்சி மாவட்ட குமாரமங்கலம், கல்பட்டிசத்திரம், கொளத்தூர், பூங்குடி ரயில் நிலையத்தில் பயண சீட்டு விற்பனை முகவர் வேலைக்கு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அந்தந்த ரயில் நிலையத்தில் அமைந்துள்ள மாவட்ட இளைஞர்களுக்கு மட்டுமே தகுதி உள்ளது. குறைந்தபட்ச வயது 18ஆக இருக்க வேண்டும். விண்ணப்பத்தை ஆக.,25-ம் தேதிக்குள் கொடுக்க வேண்டும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தகவல்களுக்கு ரயில் நிலைய மேலாளரை அணுகவும்.

error: Content is protected !!